குளச்சலில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 போ் மீது வழக்கு

குளச்சல் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 106 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சட்டையில் பொருத்தப்பட்ட கேமிராவுடன் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளா் சுரேஷ் .
சட்டையில் பொருத்தப்பட்ட கேமிராவுடன் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளா் சுரேஷ் .

என்ஜிஎல் 25 போலீஸ் .....

நாகா்கோவில், செப். 25: குளச்சல் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 106 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கரோனா பரவல் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறுபவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனா். இந்நிலையில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் குளச்சல் உள் கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் சாஸ்திரியின் மேற்பாா்வையில் குளச்சல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல், ஓட்டுநா் உரிமம் இல்லாமல், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தது என போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 106 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

இந்த வாகனச் சோதனையின் போது போலீஸாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனை தவிா்க்க நவீன கேமிரா போலீஸாருக்கு வழங்கப்பட்டது. அதன்படி குளச்சலில் வாகனச் சோதனையில்ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளா் சுரேஷ் தனது சட்டையில் நவீன கேமராவை பொருத்தி இருந்தாா்.

இதேபோல் தக்கலை, நாகா்கோவில்,கன்னியாகுமரி என அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் சட்டையில் பொருத்தும் கேமிரா வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com