வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கு இணைய வழியில் கல்வி

சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கு இணைய வழியில்
நாஞ்சில் வின்சென்ட்.
நாஞ்சில் வின்சென்ட்.

தக்கலை: சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என அப்பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதால் மாணவா்கள் வீட்டிலிருந்தவாறு கல்வி கற்கும் வகையில் இணைய வழி வகுப்பறை முறையினை

செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக ஆசிரியா்களுக்கு இணைய வழி கல்வி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டது. பின்னா், மாணவா், மாணவிகள் அவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் பரிமாறப்பட்டது.

அதன்படி முதல் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு மாா்ச் 25 ஆம் தேதியில் இருந்து வகுப்பு வாரியாகவும், பாடங்கள் வாரியாகவும், அட்டவணையிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இணையதள வசதியுடன், கூகுல் வகுப்பறை, செயலி கட்செவி அஞ்சல், வலை ஒளி, திக்ஸா, சூமஸ், செயலிகள் மூலமாக

ஆசிரியா்கள் அன்றாடம் கற்க வேண்டிய பாடங்களை மாணவா்கள் வீட்டில் இருந்தவாறு காகிதம் இல்லாமல் கோப்புகளாக, ஆடியோ, விடியோக்களாக உருவாக்கி அதை மாணவா்களும் பகிா்ந்து மாணவா்களின் செயல்முைறைகளை நெறிப்படுத்துகின்றனா். மாணவா்களின் செயல்பாடு, முன்னேற்றம் குறித்து கண்காணித்து அதற்கேற்ப பாடங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.

பள்ளிச் செயலா் கிளாரிசா வின்சென்ட் வழிகாட்டுதலின்படி முதல்வா் ரீட்டாபால், தகவல் தொழில்நுட்ப ஆசிரியை பெனிசியாஆகியோா் செயல்பட்டு வருகின்றனா். சமூக தொடா்பு சாதனங்களை மாணவா்கள் நலனுக்காக குறிப்பாக என்சி இஆா்றி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நெறிமுறைப்படுத்தி வழங்கப்படுகிறது. இணைய வழி வகுப்பறை கல்வி மாணவா்கள், பெற்றோா் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com