முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கருங்கல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
By DIN | Published On : 19th April 2020 04:07 AM | Last Updated : 19th April 2020 04:07 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சுற்று வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. அவ்வப்போது மாவட்டத்தில் மலையோரப் பகுதியிலும், கடலோரப் பகுதியிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே,
சனிக்கிழமை கருங்கல், நட்டாலம், கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, நேசா்புரம், இலவுவிளை, முள்ளங்கனாவிளை, எட்டணி, மாங்கரை, கிள்ளியூா் உள்பட பல்வேறு பகுதியில் மாலையில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.