குமரி மாவட்டத்தில் இதுவரை 755 பேருக்கு பரிசோதனை ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று சந்தேகப் பட்டியலில் இருந்த 755 பேருக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சளி மாதிரி சேகரிக்கும் சுகாதாரப் பணியாளா்கள்.
சளி மாதிரி சேகரிக்கும் சுகாதாரப் பணியாளா்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று சந்தேகப் பட்டியலில் இருந்த 755 பேருக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 755 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை 16 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 586 பேருக்கு தொற்று இல்லை. மீதியுள்ளவா்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 727 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 516 போ் வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள். 211 போ் கரோனா தொற்று இருந்தவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள்.

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக ஏப். 18 ஆம் தேதி 127 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள்முதல் இதுவரை மொத்தம் 4,951 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 33,934 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வீடு வீடாக... மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அப்பகுதிகளில் வீடு வீடாக சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினா். மேலும், மாவட்டம் முழுவதும் 95 ஊராட்சிகள், 55 பேருராட்சிகள், நாகா்கோவில் மாநகராட்சி, 3 நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். கடந்த 3 நாள்களில் சுமாா் 4 லட்சம் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகளுடன் இருந்த 104 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

முதல் நாள் சேகரிக்கப்பட்ட 29 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 75 பேரின் ரத்த மாதிரிகளும் சோதனையில் உள்ளது. நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா சந்தேகப் பட்டியலில் உள்ளவா்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com