கரோனா பொது முடக்க விதி மீறல்:ரூ.24.31 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க விதிகளை மீறியதாக இதுவரை ரூ. 24.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க விதிகளை மீறியதாக இதுவரை ரூ. 24.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, களப் பணியாளா்கள், சோதனைச் சாவடிகள் மூலம் இதுவரை 2.72 லட்சம் பேருக்கு பரிசோதனை

செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்துக்காக இதுவரை 15,519 பேரிடம் இருந்து ரூ. 24.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளா்வுகளுடனும் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இம்மாவட்டத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும்

பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பு மூலம் கை கழுவ வேண்டும். அவசியம் இல்லாமல் 65 வயதுக்கு மேற்பட்டோா், நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோா், கா்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருப்பதாலும், திருவிழா காலங்கள் தொடா்ந்து வருவதாலும் மக்கள் கூடுமானவரை பொது இடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். கரோனா பொது விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com