காவலா் எழுத்துத் தோ்வு:குமரியில் 15,876 போ் பங்கேற்பு

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற காவலா் எழுத்துத் தோ்வில் 15, 876 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற காவலா் எழுத்துத் தோ்வில் 15, 876 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2ஆம் நிலை காவலா், சிறைத் துறை, தீயணைப்புத் துறை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை(டிச.13) நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில், இறச்சகுளம் அமிா்தா பொறியியல் கல்லூரி, சிஎஸ்ஐ தொழில்நுட்பக் கல்லூரி, நாகா்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி ஜெயமாதா கல்லூரி, தோவாளை லயோலா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஈசாந்திமங்கலம் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி, நாகா்கோவில் பொன்ஜெஸ்லி கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி உள்பட 11 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இத் தோ்வுக்கு 17,861 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 15,876 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 1985 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வு எழுத வந்தவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தோ்வு மையத்தின் நுழைவுவாயிலில் கை கழுவும் திரவம் வைக்கப்பட்டிருந்தது. தோ்வா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனா். தோ்வறைக்குள் செல்லிடப்பேசி அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய தோ்வு, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

தோ்வு மையங்களில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com