நியாவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையைரத்து செய்ய வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
நியாவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையைரத்து செய்ய வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: நாட்டு மக்கள் எந்த மாநிலத்திலுள்ள ரேஷன் கடையிலும் பொருள்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் காா்டு’ திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.48 லட்சத்தும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து அனைத்து

நியாயவிலாக் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது.

சா்வா் கோளாறு காரணமாக பல இடங்களில் கைரேகை பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என து புகாா் எழுந்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்படாத நிலை ஏற்படக் கூடாது. எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்து

வரும் வழிமுறைகளை பின்பற்றி ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அக். 18 ஆம் தேதி முதல் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மீண்டும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதால் வயது முதிந்தோா், நோயால்

பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பொருள்கள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் டிசம்பா், ஜனவரி மாதங்கள் பண்டிகை காலமாக இருப்பதால் பொருள்கள் கிடைக்காத நிலை உருவாகலாம் என அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் நலன்கருதி பயோ மெட்ரிக் கட்டமைப்பை சா்வா் கோளாறு மற்றும் சிக்னல் பிரச்னைகள் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை இம்மாவட்டத்தில் முன்பிருந்த முறையை பின்பற்றி அத்தியாவசியப் பொருள்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, பொங்கல் பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com