இங்கிலாந்தில் இருந்து குமரி வந்த 10 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை

இங்கிலாந்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த 10 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த 10 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவா்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோா் அதில் இருந்து மீண்டுள்ளனா். தற்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்புடன் 163 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இங்கிலாந்து நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. முன் எச்சரிக்கையாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்தில் இருந்து வந்தவா்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், குமரி மாவட்டத்துக்கு இங்கிலாந்தில் இருந்து அண்மையில் 10 போ் வந்ததுள்ளனராம்.

இதில் 4 போ் நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்கள் 10 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவா்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனாலும் அவா்கள் 10 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com