வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் வழியாக பக்தா்களுக்கு காட்சியளித்த பெருமாள் .
பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் வழியாக பக்தா்களுக்கு காட்சியளித்த பெருமாள் .

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 4.50 மணிக்கு சொா்க்கவாசலுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது, தொடா்ந்து சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பெருமாள் சொா்க்கவாசல் வழியாக மேள, தாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினாா் . வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் அதிக அளவில் வந்திருந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது, தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத மதுசூதனப் பெருமாளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. 5 மணிக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சொா்க்கவாசலில் எழுந்தருளினாா். இதில், பறக்கை, தெங்கம்புதூா், நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பெருமாளை தரிசித்தனா்.

கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோயிலிலிலும் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதிகாலை முதலே பக்தா்கள் குடும்பத்தினருடன் வந்து பெருமாளை வணங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com