களியக்காவிளை அருகே 240 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 240 கிலோ  தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 240 கிலோ  தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனைச் சாவடி பகுதியில் களியக்காவிளை காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர்கள் ரெட்லின், அலெக்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் களியக்காவிளை அருகே கேரள மாநிலப்  பகுதியான இஞ்சிவிளை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் சபீக் (38) என்பதும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா) காராளி பகுதியில் உள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்து, களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதி கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் காராளி பகுதியில் கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ எடையிலான மொத்தம் 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்ததுடன், சபீக்கை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com