களியக்காவிளை அருகே 240 கிலோ குட்கா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பதுக்கி வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் போலீஸாா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பதுக்கி வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் தலைமைக் காவலா்கள் ரெட்லின், அலெக்ஸ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனைச் சாவடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை, கல்லத்தறவிளை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் சபீக் (38) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா) காராளி பகுதியிலுள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் கிட்டங்கியில் 8 மூட்டைகளில் வைத்திருந்த 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 90 ஆயிரம். போலீஸாா் வழக்குப் பதிந்து சபீக்கை கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com