நாகா்கோவில் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

நாகா்கோவில் பகுதியில் புதன்கிழமை (பிப்.12) மின்தடை செய்யப்படுகிறது.

நாகா்கோவில் பகுதியில் புதன்கிழமை (பிப்.12) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில், செண்பகராமன்புதூா் உப மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுவதையொட்டி, வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், நாகா்கோவில், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, கல்லூரிச் சாலை, நீதிமன்றச் சாலை, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணி நகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூா், லாயம், நாக்கால்மடம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில்...

மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் உப மின்நிலையங்களில் வியாழக்கிழமை (பிப்.13) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம்சந்திப்பு, சரலூா், ராமன்புதூா்சந்திப்பு, இந்துக்கல்லூா், வேதநகா், தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரியில்...

கன்னியாகுமரி உப மின்நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com