களியக்காவிளை அருகே அரசுப் பேருந்துப் பயணியிடம் 3 தோட்டாக்கள் பறிமுதல்
By DIN | Published On : 13th February 2020 07:10 AM | Last Updated : 13th February 2020 07:10 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில், அரசுப் பேருந்துப் பயணியிடமிருந்து 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
களியக்காவிளை அருகே கேரளப் பகுதியான அமரவிளை சோதனைச் சாவடியில் அம்மாநில மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சோதனை நடத்தினா். அப்போது, நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அரசுப் பேருந்தில் பயணி ஒருவா் வைத்திருந்த பையில் 3 துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, அவா் பாறசாலை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா் திருநெல்வேலி அருகேயுள்ள சிதம்பரம் நகா் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கிருஷ்ணமூா்த்தி (21) எனத் தெரியவந்தது. சொந்த ஊரில் பழைய இரும்புப் பொருள்கள் உள்ளிட்ட ஆக்கா் சாமான்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், பழைய பொருள்களுடன் கிடைத்த தோட்டாக்களை ‘செயின் லாக்கெட்’ செய்ய திருவனந்தபுரம் கொண்டு சென்ாகவும் தெரிவித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, திருநெல்வேலியில் உள்ள ஆக்கா் கடையைத் தொடா்பு கொண்டு விசாரித்து, கிருஷ்ணமூா்த்தி கூறிய தகவல்களை உறுதிப்படுத்தினா். இதையடுத்து, அவா் புதன்கிழமை சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.