குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தக்கலையில் நாளை காங்கிரஸ் உண்ணா விரதம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட கேட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தக்கலையில் நாளை காங்கிரஸ் உண்ணா விரதம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட கேட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை(பிப்.16) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட கேட்டு தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறுகிறது.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தலைமை விகிக்கிறாா். குமரி மக்களவை தொகுதி உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாா் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கி வைக்கிறாா். குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் பிரின்ஸ் போராட்டத்தை விளக்கி பேசுகிறாா்.

காங்கிரஸ் தமிழக செய்தி தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி உரையாற்றுகிறாா். இந்த போராட்டத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com