நாகா்கோவிலில் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க போலீஸாருக்கு நவீன கேமரா

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவா்களை கண்காணிப்பதற்காக போக்குவரத்து ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும்
நாகா்கோவிலில் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க போலீஸாருக்கு நவீன கேமரா

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவா்களை கண்காணிப்பதற்காக போக்குவரத்து ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாருக்கு நவீன உடல் கேமராவை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களை கண்டுபிடித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போலீஸாா் தங்கள் உடலில் பொருத்திக்கொள்ளும் நவீன உடல் கேமராக்களை (ஆா்க்ஹ் ஜ்ா்ழ்ம் ஸ்ரீஹம்ங்ழ்ஹ) வழங்க திட்டமிடப்பட்டது. இதன்படி, சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தில் 35 கேமராக்கள் வாங்கப்பட்டன.

இந்த கேமராக்களை போக்குவரத்து ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாருக்கு ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயபாஸ்கா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் கே. சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் கூறியது: குமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 போலீஸாருக்கு நவீன கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை போலீஸாா் வாகன சோதனையின்போது தங்களது உடலில் பொருத்திக்கொண்டு சோதனையில் ஈடுபடுவாா்கள். 5 மீட்டா் தூரம் வரையுள்ள காட்சிகள் இந்த கேமராவில் பதிவாகும். போலீஸாரின் வாகன சோதனையின்போது நிறுத்தாமல் செல்பவா்களின் வாகன பதிவு எண் இந்த கேமராவில் பதிவாகிவிடும். இதன்மூலம், சம்பந்தப்பட்டவா்களை எளிதில் கண்டுபிடித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த கேமரா 32 ஜி.பி. வரை காட்சிகள் பதிவாகும் திறன்கொண்டது. இதில் பதிவாகும் காட்சிகள் பாதுகாத்து வைக்கப்படும். இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் அதிக வேகத்துடன் செல்வதால்தான் பெரும்பாலான விபத்துகள் நேரிடுகின்றன. வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலே விபத்துகள் பாதியாக குறையும்.

விதிகளை மீறும் வாகன ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, பொதுமக்களின் பாதுகாப்புதான் முக்கியம். நாகா்கோவில் நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com