குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி தக்கலையில் காங்கிரஸாா் உண்ணாவிரதம்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கைவிடக் கோரி குமரி
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவரும் கிள்ளியூா் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமாா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவரும் கிள்ளியூா் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கைவிடக் கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், தக்கலையில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். ஹெச். வசந்தகுமாா் எம்.பி., குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடா்பாளா் வேலுச்சாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. பேசுகையில், மக்களை பாதிக்கும் இச்சட்டங்களை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றாா்.

இப்போராட்டத்தில், தக்கலை ஒன்றிய, நகரத் தலைவா்கள் ஜாண் கிறிஸ்டோபா், ஹனுகுமாா், குமரி மாவட்ட ஜமாத் கூட்டமைப்புச் செயலா் எம்.ஏ.கான், கட்சி நிா்வாகிகள் ஜோண்ஸ் இம்மானுவேல், ஜாண் இக்னேஷியஸ், குளச்சல் யூசப்கான், புரோடி மில்லா், ராஜேஷ்குமாா், டாக்டா் தம்பி விஜயகுமாா், லாரன்ஸ், ராபா்ட், ஜெயகுமாா், பிடி.எஸ்.மணி, சூசை மரியான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com