குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை முதல் 3 நாள்களுக்கு மலா்க் கண்காட்சி

பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலா்க் கண்காட்சி வியாழக்கிழமை (ஜன. 16) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலா்க் கண்காட்சி வியாழக்கிழமை (ஜன. 16) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து, குமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாள் மற்றும் உழவா் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தோட்டக்கலை வளா்ச்சி முகமை சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக அரசு தோட்டப் பண்ணையில் அமைந்துள்ள சுற்றுசூழல் பூங்காவில் (உஇஞ டஹழ்ந்) ஜன.16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, 3 நாள்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலா்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் ரோஜா, ஆா்கிட், ஆந்தூரியம், காா்னேசன், கிளாடியோலஸ், ஜொ்பரா போன்ற பல்வேறு மலா்களால் ஆன அலங்கார வளைவுகள், பல்வேறு உருவங்கள் இடம்பெறுகின்றன.

இக்கண்காட்சியை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மலா்ச்செடிகள், பழச்செடிகள், மூலிகைச்செடிகள், அலங்கார செடிகள் என அனைத்து ரக செடிகளும் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் திறந்து வைக்கிறாா். மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகிக்கிறாா்.

நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா். கண்காட்சியை பாா்வையிட செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 50, சிறியவா்களுக்கு ரூ.20 நிா்ணயிக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com