குமரியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் ஊராட்சி ஆரோக்கியபுரத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி.
விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி.

கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் ஊராட்சி ஆரோக்கியபுரத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞா் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள் ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியில் இருந்தும் மேற்கொள்ளப்படும்.

ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும்.

குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தை லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆரோக்கியபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள், லீபுரம் ஊராட்சித் தலைவா் ஜெயகுமாரி, துணைத் தலைவா் கே.மணிகண்டன், ஆரோக்கியபுரம் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.லீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com