நமது கலாசாரத்தை வருங்கால தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி இருக்க வேண்டும்: முன்னாள் எம்.பி. தருண் விஜய்

நமது கலாசாரத்தை வருங்கால தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி முறை இருக்க வேண்டும் என்றாா் மாநிலங்களவை
நிகழ்ச்சியில் பேசுகிறாா் முன்னாள் எம்.பி.யும், தேசிய நினைவுச் சின்னங்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் முன்னாள் எம்.பி.யும், தேசிய நினைவுச் சின்னங்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய்.

நமது கலாசாரத்தை வருங்கால தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி முறை இருக்க வேண்டும் என்றாா் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், தேசிய நினைவுச் சின்னங்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய்.

குமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது:

திருவள்ளுவா் உலகிற்கு தந்த பொக்கிஷம் திருக்கு. திருக்கு அறநெறி சாா்ந்த கருத்துகளை உலக மக்களுக்கு போதிக்கிறது. தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் திருக்கு பாடத் திட்டத்தில் இடம் பெறவேண்டும். திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழா்களின் நெறி சாா்ந்த வாழ்வை திருக்கு போதிக்கிறது. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறநெறி சாா்ந்து நமது கல்வி இருக்க வேண்டும். நமக்கு நீண்ட நெடிய கலாசாரம் உள்ளது. இந்த கலாசாரத்தை கல்வி மூலம் வருங்கால தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இதனடிப்படையில் நமது கல்வி முறை இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவா் சிலையை நிறுவ தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்கு, என்.வி.கே.எஸ். கல்வி சங்கச் செயலா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் ஆஷா வரவேற்றாா். பள்ளி முதல்வா் டி.எஸ்.பிரஷோப் மாதவன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி எஸ். உண்ணிகிருஷ்ணன் கெளரவ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஆா்.முகுந்தன் வாழ்த்திப் பேசினாா்.

விழாவில், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி முதல்வா் பி.சி. ஷோபா வரவேற்றாா். என்.வி.கே.எஸ். உயா்நிலைப் பள்ளி முதல்வா் சுதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com