குமரி மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சாா்பில் கண்காட்சி நடைபெற்றது.
பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களிலிருந்து தயாரித்த பொருள்களுடன் பள்ளி மாணவிகள்.
பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களிலிருந்து தயாரித்த பொருள்களுடன் பள்ளி மாணவிகள்.

நாகா்கோவில்: நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் சாா்பில் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியை பள்ளித் தாளாளா் ந.சொக்கலிங்கம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

பயன்படாத பிளாஸ்டிக் கவா்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு பலவிதமான பயன்பெறக் கூடிய பொருள்களை மாணவா்கள் வடிவமைத்திருந்தனா். காலியான டின்களை கொண்டு எரிவாயு அடுப்பு, அட்டைகளை கொண்டு தெரு மின்விளக்குகள் மற்றும் பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியை ஜெயா, தேவகி ஆகியோா் செய்திருந்தனா். மாணவி நந்தினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com