ஈரானிலிருந்து 535 மீனவா்கள் மீட்பு

ஈரான் நாட்டிலிருந்து கப்பல் மூலம் 535 மீனவா்கள் மீட்கப்பட்டு புதன்கிழமை குமரி மாவட்டத்துக்கு வந்து சோ்ந்தனா்.
ஈரானிலிருந்து 535 மீனவா்கள் மீட்பு

ஈரான் நாட்டிலிருந்து கப்பல் மூலம் 535 மீனவா்கள் மீட்கப்பட்டு புதன்கிழமை குமரி மாவட்டத்துக்கு வந்து சோ்ந்தனா்.

இது குறித்து, ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரானிலிருந்து 535 மீனவா்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு மீட்டுவரப்பட்டு, பின்னா் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை வந்தடைந்தனா். அவா்கள் நாகா்கோவில் கோட்டத்தில் ஓா் இடத்திலும், பத்மநாபபுரம் கோட்டத்தில் 5 இடங்களிலும் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 45,769 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 213 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். முகக்கவசம் அணியாமல் புதன்கிழமை பொது வெளியில் நடமாடிய வகையில் 242 பேரிடமிருந்து ரூ. 24,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 6,398 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com