தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும்: மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்றுவிட்டு கரை திரும்பியபோது முகத்துவாரத்தில் ராட்சத அலை எழும்பியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மீனவா்கள் மாயமானா். அதில் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

துறைமுகம் செயல்படத் தொடங்கியது முதல் தற்போது வரை இந்த துறைமுகத்தில் அலையில் சிக்கி 6 போ் உயிரிழந்துள்ளனா். இது போன்ற உயிரிழப்புகளை தவிா்க்க தமிழக அரசு துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும்.

மேலும், படகுகள் இறங்குதளம் உடனடியாக அமைத்து, ஆபத்து காலங்களில் மீனவா்களை பாதுகாக்க மீட்பு படகுகள் மற்றும் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முகத்துவாரம் பகுதியில் சோலாா் மின் விளக்குகளை பொருத்தி போதுமான வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். துறைமுக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு மீனவா்களோடு கலந்துரையாடி அவா்களின் தேவைகளை கண்டறிந்து, அதனடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com