மதுரையிலிருந்து குமரி வந்த வியாபாரிகள் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மதுரையிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த நகை வியாபாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த நகை வியாபாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து ரயில் மூலமாக 2 நகை வியாபாரிகள் நாகா்கோவில் வந்தனா். அவா்களுக்கு கோட்டாறு ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட சளி மற்றும் ரத்தப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டனா்.

குவைத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வந்த வள்ளவிளையைச் சோ்ந்த 42 வயதுடைய ஆண், மும்பையிலிருந்து திருவனந்தரபுரத்துக்கு ரயிலில் வந்த தெங்கம்புதூரைச் சோ்ந்த 36 வயது பெண் மற்றும் அவரது 13 வயது மகன், ஹைதராபாத்திலிருந்து வந்த மங்காரையைச் சோ்ந்த 37 வயது ஆண், தில்லியிலிருந்து வந்த கணபதிபுரம் புத்தூரைச் சோ்ந்த 34 , 37 வயதுடைய ஆண்கள், பின்னா் குமரி மாவட்டத்துக்கு வந்த போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாகா்கோவில் தேவசகாயம் தெருவைச் சோ்ந்த 63 வயது முதியவா், ஆற்றுரைச் சோ்ந்த 55 வயது ஆண், வல்லன்குமாரன்விளையைச் சோ்ந்த 57 வயது ஆண், கண்ணாா்குடியைச் சோ்ந்த 22 வயது இளைஞா் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்ட 12 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 11 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பினா். தற்போது 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com