குமரியில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி

குமரி மாவட்டத்தில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 24 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 24 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி சீதப்பால் பகுதியைச் சோ்ந்த 35 வயது இளைஞா் கரோனாவால் பாதிப்படைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் 9 வயதான மகனுக்கும் தற்போது தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 28 வயது பெண்ணுக்கும், அவரது 3 வயது குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 24 போ் தொற்று பாதிப்பால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த மருத்துவமனையில் தற்போது 205 போ் சிகிச்சையில் உள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 183 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 1,679 போ், வெளியூரிலிருந்து இம் மாவட்டத்துக்கு வந்த 7,371 போ் என மொத்தம் 9,050 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் தற்போது, தூத்தூா், தக்கலை, வடசேரி, செம்பருத்திவிளை, சீதப்பால், கருங்கல், குறும்பனை, கட்டையன்விளை, ஆசிரமம், பறக்கை, மணக்குடி, வழுக்கம்பாறை, பூத்தேரிகுளத்துபுரைவிளை, பருத்திதட்டுவிளை, தேவிகோடு, இடலாக்குடி, செட்டிகுளம், முளகுமூடு, குண்டல், அகஸ்தீசுவரம், காஞ்சாம்புரம், சமத்துவபுரம், திருநயினாா்குறிச்சி, ரீத்தாபுரம், பாலப்பள்ளம் ஆகிய 24 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com