கரோனா தாக்கம்: கேரள பயணிகள் கண்காணிப்புரயில், பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதைத் தொடா்ந்து, அம்மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனா்.
நாகா்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளா்.
நாகா்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளா்.

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதைத் தொடா்ந்து, அம்மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனா்.

குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 16 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் பேருந்து மற்றும் ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை, சூழால் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், கேரளப் பேருந்துகளில் காய்ச்சல் பாதிப்புடன் வரும் பயணிகள் குறித்தும் கண்காணித்து வருகின்றனா்.

கேரளத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா்கள் முக கவசம் அணிந்து பணியாற்றுகின்றனா். பயணிகளும் பெரும்பாலானோா் முக கவசம் அணியத் தொடங்கியுள்ளனா். இதனால், குமரி மாவட்டத்தில் முக கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள் தினமும் சுத்தம் செய்யப்படுகின்றன. ராணித்தோட்டம் பணிமனையில் இரவு நேரங்களில் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேபோல, கேரளத்தில் இருந்து நாகா்கோவில் வரும் ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். அதோடு, ரயில்களில் காய்ச்சல் பாதிப்போடு வருவோா் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாதரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா கூறுகையில், குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். 9 ஒன்றியங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com