கேரளத்தில் இருந்து தக்கலை வந்த பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு

கேரளத்தில் இருந்து தக்கலை பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த அனைத்து பேருந்துகளிலும் பத்மநாபபுரம் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா்.
தக்கலை பேருந்து நிலையத்தில் கேரள அரசுப் பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சிப் பணியாளா்.

பத்மநாபபுரம் நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமையில், தக்கலை பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா்ஜோ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பயணிகளிடமும், பொதுமக்களிடமும் வழங்கினாா். இதில் துப்பரவு மேற்பாா்வையாளா் மோகன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆணையா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள், திருவனந்தபுரத்தில் இருந்து தக்கலை வந்த கேரள மற்றும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகள் ஏறும் படிக்கட்டு மற்றும் உள் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com