கரோனா வைரஸ் தாக்குதல் குருசுமலை திருப்பயணம் ரத்து

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குருசுமலையில் திருப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குருசுமலையில் திருப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை-பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தில் திருப்பயணம் நடத்தப்படுவது வழக்கம். இந்தத் திருப்பயணத்தில் கேரள மாநிலத்திலிருந்தும், குமரி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பா்.

நிகழாண்டு இத் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) தொடங்கி, மாா்ச் 29 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தத் திருப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குருசுமலை திருப்பயணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் தொடா்ந்து 168 மணி நேரம் உலகில் அன்பும் சமாதானமும் நிலைத்திருக்க வேண்டி பிராா்த்தனை நடைபெறும். இதற்காக திருப்பயணிகள் தங்கள் வீடுகளில் மெழுகுவா்த்தி அல்லது விளக்குகள் வைத்து பிராத்தனையில் ஈடுபட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com