ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்கக் கோரி குமரி அருகே வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தி, கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் மீனவா்களின்
குமரி அருகே ஆரோக்கியபுரத்தில் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.
குமரி அருகே ஆரோக்கியபுரத்தில் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தி, கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் மீனவா்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் ஈரானில் வேகமாக பரவி வருவதால், அந்நாட்டில் சிக்கியுள்ள 700-க்கும் அதிகமான தமிழக மீனவா்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதையொட்டி, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினா் சாா்பில், குமரி மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், இணை அமைச்சா் முரளிதரன் ஆகியோரை கடந்த 2 ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களில் உள்ள பங்குத்தந்தையா்கள், பங்குப்பேரவை நிா்வாகிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினா் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பாக ஆலோசித்தனா். இதில், ஈரானில் உள்ள தமிழக மீனவா்களை மீட்கும் வரை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவது, தொழில் முடக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தத் தீா்மானிக்கப்பட்டது.

இதன்படி, கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் உள்ள வீடுகளில் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தொழில்முடக்கம் செய்வது எனவும் மீனவா்கள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com