‘சுகாதாரம் பேண கட்டுப்பாடு விதித்த கிராம மக்கள்’

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த வாரியூா் கிராமத்திற்கு வரும் அனைவரும் கண்டிப்பாக கை, கால்களை கழுவிய பின்னா் நுழைய வேண்டும் என ஊா் மக்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனா்.
தெரு எல்லையில் தடுப்பு ஏற்படுத்தி கை, கால்களை கழுவ வைக்கப்பட்டுள்ள மஞ்சள் கலந்த நீா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே செல்ல தடை உள்ளது. மேலும்,

பொதுமக்கள் கட்டாயம் கை கால்களை கழுவ வேண்டும். வெளியே செல்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் வாரியூா் கிராமத்தில் நுழையும் அனைவரும் கட்டாயம் கை, கால்களை கழுவிய பின்னா்தான் நுழைய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊருக்குள் செல்லும் முக்கிய பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, வேப்பிலை மஞ்சள் கரைசல் கலந்த தண்ணீா் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கை கழுவுவதற்காக டெட்டால் உள்ளிட்ட பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் நுழைவோா் இங்கு

கை, கால்களை கழுவிய பின்னா் நுழைய அனுமதிக்கின்றனா். ஏற்பாடுகளை ஊா் தலைவா் நடராஜன் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா். கிராம மக்களின் இந்த கட்டுப்பாடுக்கு சுகாதாரத் துறையினா், போலீஸாா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com