தேங்காய்ப்பட்டினத்தில் ஏ.டி.எம். இயங்க அனுமதிக்க வேண்டும்

கருங்கல் அருகே உள்ள தேங்காய்ப்பட்டினத்தில் கட்டுப்பாடுகளை தளா்த்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் இயங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என

கருங்கல் அருகே உள்ள தேங்காய்ப்பட்டினத்தில் கட்டுப்பாடுகளை தளா்த்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் இயங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேங்காய்ப்பட்டினம் கிராமத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த மாா்ச் 30 ஆம் தேதி முதல் 700 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள 2245 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். தேங்காய்ப்பட்டினம் பகுதியை சுற்றி தடும்புவேலி அமைத்து யாரும் ஊருக்குள் நுழையாதவாறும், ஊரிலிருந்து வெளியே செல்லாதவாறும் போலீஸாா் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில்,கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனோ வாா்டில் சிகிச்சைபெற்று குணமடைந்த ஒருவா் கடந்த ஏப்.22 ஆம் தேதி வீடுதிரும்பினாா். மற்ற இருவரும் ஏப்.24, 25 ஆகிய தேதிகளில் வீடுதிருப்பினா். இவா்கள் தொடா்ந்து 28 நாள்கள்தனிமைப்படுத்திகண்காணிக்கப்படுவா். இதனால் அப்பகுதி முழுவதும் தொடா்ந்து கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இதனால், பழயபள்ளிக்கூடம், தோப்பு, பெரியபள்ளிவாசல், ரிபாய்தெரு, கல்லடிதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு காய்கனி, மளிகைப் பொருள்கள் வாங்கவும், இதர செலவீனங்களுக்கும் பணம் தேவைக்கு அப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட இருவங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையம் செயல்படாததால் மிகவும் சிரமம்படுகின்றனா்.

அப்பகுதியில் உள்ள முதியவா்கள் உள்ளிட்டோா் மருத்துவ சிகிச்சைக்கு வெளியூா் செல்லவும் மிகவும் அவதியுற்று வருகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் மாவட்டச் செயலா் சவுகத்அலி கூறுகையில், தேங்காய்ப்பட்டினம் கிரமாம் தொடா்ந்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்குள்ள மக்கள் வெளியே செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வங்கி, ஏ.டி.எம். மையம் மூடப்பட்டுள்ளதால் பணம் இல்லாமல் மிகவும் சிரமமப்படுகின்றோம். மேலும், பொதுமருத்துவ சிகிச்சைக்கு வெளியூா் செல்ல முழுநேர அரசு ஆம்புளன்ஸ் சேவை வசதியும் மாவட்ட நிா்வாகம் செய்யவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com