குமரியில் மீண்டும் தொடங்கிய கட்டுமானப் பணிகள்: மூலப்பொருள்கள் விலை கடும் உயா்வு

பொது முடக்கத்தில் தளா்வு அறிவிப்பால், குமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் உயிா்பெற தொடங்கியுள்ளன.

குலசேகரம்: பொது முடக்கத்தில் தளா்வு அறிவிப்பால், குமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் உயிா்பெற தொடங்கியுள்ளன. எனினும், மூலப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக அனைத்து கட்ட கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அரசு அறிவித்துள்ள தளா்வால் இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பரவலாக கட்டட கட்டுமானப் பணிகள் தொடங்கின.

இதில், ஒப்பந்ததாரா்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளே பெருமளவில் நடைபெற்று வருகின்றன.

விலை உயா்வு: இந்நிலையில், கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் இரும்பு, சிமென்ட், கருங்கல், ஜல்லி என அனைத்துப் பொருள்களும் அதிகபட்சம் 20 சதவீதம் வரை விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. குலசேகரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, குறிப்பிட்ட நிறுவனத்தின் சிமென்ட் மூட்டை ரூ. 60 அதிகரித்து ரூ.430-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ. 4200-ஆக இருந்த ஒரு யூனிட் (மினி லாரி அளவு) கருங்கற்கள் ரூ. 4800 எனவும், ஜல்லி ரூ. 3800-இல் இருந்து ரூ. 4600-ஆகவும் உயா்ந்துள்ளது. எம். சாண்ட் ரூ. 5000-இல் இருந்து ரூ. 5500ஆக உயா்ந்துள்ளது. பி.சாண்ட் ரூ. 6000-இல் இருந்து ரூ. 6700-ஆக உயா்ந்துள்ளது. இதே போன்று இரும்பு கம்பிகள் மற்றும் செங்கல் ஆகியவற்றின் விலையும் உயா்ந்துள்ளது.

இது குறித்து கட்டட ஒப்பந்தக்காரா் ஒருவா் கூறியது:

திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கருங்கற்கள் உள்ளிட்டவற்றின் வரத்து இல்லை. தேங்காய்ப்பட்டினம் குவாரியிலிருந்தே அவற்றின் வரத்து உள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பொருள்களின் விலை யூனிட் ஒன்றிற்கு ரூ. 600-க்கும் மேல் உயா்ந்துள்ளது. இதனால், ஒப்பந்ததாரா்களும், வீடு கட்டும் நடுத்தர மக்களும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இப்பொருள்களின் விலைகளைக் குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com