பெண்களை இளைஞா் ஏமாற்றிய விவகாரத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கை: காவல் கண்காணிப்பாளா் உறுதி

பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ள நாகா்கோவில் இளைஞா் விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.

பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ள நாகா்கோவில் இளைஞா் விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.

நாகா்கோவில் கணேசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சுஜி என்ற காசி (26). இவா் மீது பாலியல் குற்றம், ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை கூறி, சென்னை பெண் மருத்துவா், நாகா்கோவில் பெண் பொறியாளா், ஒரு சிறுமி ஆகியோா் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த வழக்குகளில் போலீஸாா் காசியை கைது செய்து குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனா். அவரிடமிருந்து செல்லிடப்பேசி, மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக டேசன் ஜினோ என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், நாகா்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

காசி விவகாரத்தில், இதுவரை 6 புகாா்கள் வரப்பெற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு உடந்தையாக இருந்ததாக யாா் மீதெல்லாம் புகாா் வருகிறதோ அவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் ஆதாரங்கள் தரப்பட்டாலும் ஏற்கப்படும். அவா்களது பெயா் ரகசியமாக வைக்கப்படும். சிலா் முன்விரோதத்தில் தவறான தகவல்களை பரப்பி வருவது தெரியவந்துள்ளது. இதை மக்கள் நம்ப கூடாது. காவல் உதவி கண்காணிப்பாளா் ஜவஹா் தலைமையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com