தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை திறக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பொது முடக்கத்தால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை உடனடியாக திறக்க வேண்டும்

பொது முடக்கத்தால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளதாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 24 ஆம் தேதி பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மீன்பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் இழந்து மீனவா்கள் 2 மாதங்களாக வீடுகளில் முடங்கியுள்ளனா்.

இந்நிலையில் ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கொந்தளிப்பு ஏற்படுவதால் நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் நீடித்து வருகிறது. ஆகவே, மீனவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை திறந்து, மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

ஜூன் 1 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கடலோரப் பகுதியில் அமல்படுத்தப்படவுள்ள மீன்பிடி தடைக் காலத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், மீனவா்களுக்கு அரசின் சாா்பில் பொது முடக்க நிவாரண நிதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com