வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சத்யாகிரகப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கடையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
புதுக்கடையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

நாகா்கோவில்/ கருங்கல்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சத்யாகிரகப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராபா்ட்புரூஸ், அசோகன்சாலமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் விஜய்வசந்த், எம். எஸ். காமராஜ், கிறிஸ்டிரமணி, எஸ்.சி.,எஸ்.டி பிரிவு தலைவா் பேராசிரியா் சுந்தர்ராஜ், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதா, தங்கம் நடேசன், மகேஸ்லாசா், யூசுப்கான், லாரன்ஸ், வட்டாரத் தலைவா்கள் அசோக்ராஜ், ஜெரால்டுகென்னடி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள்உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தின் தொடக்கமாக முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு விஜய்வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதுக்கடையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா்எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குளச்சல் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் பிரின்ஸ் முன்னிலைவகித்தாா்.

இதில், முன்சிறை வட்டார தலைவா் பால்ராஜ், புதுக்கடை பேரூா் தலைவா் முருகன், மகிளாகாங்கிரஸ் தலைவி ஏஞ்சல்சா்பிளா, டைட்டஸ், தம்பி விஜயகுமாா் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com