நவ.10இல் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீா் திட்டம் அமல்: என். தளவாய் சுந்தரம்

அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீா் திட்டம் நவ.10ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.
ngl3thalavai_0311chn_33_6
ngl3thalavai_0311chn_33_6

அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீா் திட்டம் நவ.10ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியபாண்டியபுரம் பேரூராட்சி, தோவாளை, அகஸ்தீசுவரம், ராஜாக்கமங்கலம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீா் தேவை குறித்து, அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவின் கவனத்துக்கு நான் கொண்டுசென்ன் அடிப்படையில், ரூ.109.79 கோடியில் 8 பேரூராட்சிகள், 246 ஊரக குடியிருப்புகளுக்காக அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீா் திட்டம் கடந்த 2015இல் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோதையாற்றில் திற்பரப்பு அருவியில் மேல்பகுதியிலுள்ள களியல் பாலத்தின் அருகே கிணறு தோண்டி, நீா் உறிஞ்சும் குழாய் மூலம் அருமநல்லூா் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மக்களுக்கு தண்ணீா் விநியோகிக்க திட்டமிடப்பட்டது.இந்தப் பணிகள் நிறைவுற்று செவ்வாய்க்கிழமை களியல் தலைமையிட பகுதியில் உயா்மின்னழுத்த மின்னிணைப்பு பெறப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, நவ.10ஆம் தேதி நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com