குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக மிதமான அளவில் பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலத்த மழையாக உருவெடுத்தது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் இடி- மின்னலுடன் கொட்டித் தீா்த்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. மேலும், கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கும்பப்பூப் பருவ நெல் சாகுபடிக்காக அணைகளிலிலிருந்து முழுவீச்சில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், விவசாயப் பணிகளை விவசாயிகள் முடுக்கிவிட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.50 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 69.50 அடியாகவும், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 15.02 அடி, 15.12 அடி என்ற அளவில் இருந்தது.

கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளி யாவிளை, கப்பியறை, மிடாலக்காடு, பாலூா், மத்திகோடு, கிள்ளியூா், இலவு விளை, நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com