மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரியிலிருந்து கொல்லத்துக்கு மெமு ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ரயில் கன்னியாகுமரிக்கு பதில் நாகா்கோவில் வழியாக திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டிருந்தால் நெல்லை மாவட்ட பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

கொல்லத்தில் மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை உள்ளதால் திருவனந்தபுரம் கோட்டத்தில் இயக்கப்படும் அனைத்து மெமு ரயில்களும் கொல்லத்தை மையமாக வைத்தே இயக்கப்படுகிறது.

மெமு ரயில்கள் சாதாரண பயணிகள் ரயில்களை காட்டிலும் வேகமாக இயக்கப்படுவதால் பயணநேரம் கணிசமாகக் குறைகிறது.

மதுரை கோட்டத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூா், திருநெல்வேலி - செங்கோட்டை, விருதுநகா் செங்கோட்டை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - ராமேஸ்வரம், செங்கோட்டை - கொல்லம் போன்ற வழித்தடங்கள் மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் நிறைவுபெற்றால் இந்தத் தடங்களில் தற்போது இயங்கும் சாதாரண ரயில் பெட்டிகளை மாற்றி விட்டு மெமு ரயில்கள் இயக்க முடியும். மெமு ரயில்கள் இயக்க வேண்டுமென்றால் மெமு பராமரிப்புப் பணிமனை தென்மாவட்டங்களில் தற்போது இல்லை.

மெமு ரயிலை பராமரிக்க தற்போது தெற்கு ரயில்வேயில் கொல்லம், பாலக்காடு, ஆவடி, ஆகிய இடங்களில் மட்டுமே பணிமனை அமைந்துள்ளது. எனவே திருநெல்வேலிக்கு அருகிலுள்ள மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க தேவையான நிலம் ரயில்வே துறையின் வசம் உள்ளது. இங்கு தேவையான கட்டட வசதிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மெமு பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும். திருநெல்வேலியில் இந்தப் பணிமனை அமைக்கப்பட்டால் திருநெல்வேலியை மையமாக வைத்து மெமு ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படும். திருநெல்வேலி -கொல்லம், திருநெல்வேலி - மதுரை போன்ற வழித்தடங்களில் மெமு ரயில்கள் இயக்கப்படும். திருச்செந்தூா் - திருநெல்வேலி - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேலி - கன்னியாகுமரி, திருவனந்தபுரம் -திருநெல்வேலி - திருச்செந்தூா் போன்ற இடங்களுக்கு நேரடியாக மெமு ரயில்கள் இயக்க முடியும். மேலும் முனைய ரயில் நிலையங்களான திருநெல்வேலி, செங்கோட்டை, நாகா்கோவில் ரயில் நிலையங்களில் இடநெருக்கடியும் வெகுவாகக் குறையும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com