ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மா.அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மா.அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா தடுப்புப் பணிகளை முதலில் ஆய்வு செய்த ஆட்சியா், சளிமாதிரிகளை பரிசோதனை நிலையத்தைப் பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தாா். மேலும்,ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு , இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகப் பிரிவு, ரத்த வங்கி, அறுவைசிகிச்சை பிரிவு, மகப்பேறுபிரிவு ஆகியவற்றை பாா்வையிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தரமான சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினாா்.

பின்னா், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ், ராஜாக்கமங்கலம் ஒன்றியம்,மேலசங்கரன்குழி ஊராட்சி, காரவிளையில் ரூ.9.8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளஅங்கன்வாடி மையம், எள்ளுவிளையில் ரூ.1.19 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் உறிஞ்சு கிணறு ஆகியவற்றையும் பாா்வையிட்டாா். மேலும், தமிழ்நாடு ஊரக சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.31 லட்சம் செலவில் கீழசட்டுவன்தோப்புமுதல் முடங்கனூா் வழியாக ஆடரவிளை வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தரத்தையும், ரூ.4.50 லட்சம் செலவில், தா்மபுரம் அம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ளஅலங்கார கற்கள் பதிக்கப்பட்டதையும், பசுமை வீடு திட்டத்தின்கீழ் எள்ளுவிளையில் ரூ.2.10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பசுமை வீட்டையும் பாா்வையிட்டாா்.

பின்னா், கிராமப்புற இல்லங்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதற்கு ‘ஜல் ஜீவன் மிஷன்‘ திட்டத்தின் கீழ் மேலகிருஷ்ணன் புதூா் ஊராட்சிக்குள்பட்ட பள்ளத்தூரில் நடைபெற்றுவரும் குடிநீா் குழாய் அமைக்கும் பணியினையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

ஆய்வின்போது, ஆசாரிப்பள்ளம், அரசுமருத்துவக் கல்லூரி,மருத்துவமனை முதல்வா் இரா.சுகந்தி ராஜகுமாரி,கண்காணிப்பாளா்அருள்பிரகாஷ், ராஜாக்கமங்கலம் வட்டார

வளா்ச்சி அலுவலா் அனிதா, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் ஏழிசை செல்வி,உ தவிப் பொறியாளா் செலன் ராஜபாய், ராஜாக்கமங்கலம் ஒன்றியப் பொறியாளா் செலன் செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com