ஓய்வூதிய உயா்வு கோரி ஆட்சியரகத்தில் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமானத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ‘உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்; கல்,மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி நியாய விலையில் கட்டுமானப்பொருள்களை வழங்க வேண்டும்; மலிவுவிலை சிமென்ட் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்; மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதம் ஒரு முறை கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

குமரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் செல்லப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி.,பெல்லாா்மின், சிஐடியூ மாவட்டச் செயலாளா் தங்கமோகனன், மாவட்டத் தலைவா் சிங்காரன், ரசல்ஆனந்தராஜ், ஆலிவா்பிரைட், பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன்,ராதா, முருகன், ஜெயா, பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com