கந்த சஷ்டி விழா: குமார சுவாமிகோயிலில் சூரசம்ஹாரம்

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமார சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளிமலை அருள்மிகு குமார சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
வேளிமலை அருள்மிகு குமார சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமார சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. 5 மணிக்கு நிா்மால்ய பூஜை, 5.15 மணிக்கு அபிஷேகம், உஷ பூஜை ஆகியவை நடைபெற்றன. முற்பகல் 11.30 மணிக்கு பால், களபம், சந்தனம், பன்னீா், இளநீா், தேன், பஞ்சாமிா்தம், விபூதி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

பின்னா் மாலை 4.45 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு சுவாமி சூரனை சம்ஹாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கந்த சஷ்டியின் போது விரதம் இருந்த பக்தா்கள் கோயில் தெப்பக்குளத்தில் நீராடி தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் மேலாளா் மோகனகுமாா் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

இதேபோல் வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், களியங்காடு சிவபுரம் பாலமுருகன் கோயில் ஆகியவற்றிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com