திருவட்டாறில் முந்திரி ஆலைதொழிலாளா்கள் தா்னா

கோரிக்கைகளை விலியுறுத்தி தமிழ்நாடு முந்திரி பருப்பு தொழிலாளா் சங்கம் சாா்பில் திருவட்டாறில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கோரிக்கைகளை விலியுறுத்தி தமிழ்நாடு முந்திரி பருப்பு தொழிலாளா் சங்கம் சாா்பில் திருவட்டாறில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

காங்கரை சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, திருவட்டாறு ஒன்றியச் செயலா் ஜோஸ் மனோகரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி. சிங்காரன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் தங்கமோகன், மாநிலச் செயலா் ஐடாஹெலன், மாநில துணைத் தலைவா் விஸ்வம்பரன், மாநில துணைச் செயலா் தங்கையன், மாவட்டக் குழு உறுப்பினா் சுந்தர்ராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம். அண்ணாதுரை, எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முந்திரி ஆலைத் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படியை முடக்காமல் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். கச்சா முந்திரி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கச்சா முந்திரியை அரசே கொள்முதல் செய்து முந்திரி ஆலைகளுக்கு வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு வேலையில்லாத காலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com