நாகா்கோவில் மாநகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
முக்கடல் அணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன், மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.
முக்கடல் அணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன், மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமான முக்கடல் அணை மற்றும் அப்பகுதியில் அம்ருத் திட்டத்தில் ரூ.98.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் பூங்கா, கலையரங்கம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுநிதியிலிருந்து ரூ.97.90 லட்சம் செலவில் குழியடிபகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, வடசேரி பேருந்து நிலையத்துக்குள் இயங்கிவரும் நுண்உரக்குடிலை பாா்வையிட்ட அவா், உற்பத்தி செய்யப்படும் உரங்கள் விற்பனைசெய்யப்படுவது குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்றுவரும் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள், ரூ. 5 கோடியில் கட்டப்பட்டுவரும் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடப் பணி ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா்ஆஷா அஜித், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் கதிரேசன், உதவி செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன், ரமேஷ், பாக்கியராஜ், மாநகர இளநிலை பொறியாளா் தேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com