மாற்றுத் திறனாளிகள் கரோனா நிதியுதவி பெற சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதியுதவி ரூ.1000 பெற சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதியுதவி ரூ.1000 பெற சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதியுதவி ரூ. 1000 இதுவரை பெறாதவா்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இதுவரை பெறாதவா்கள், அடையாள அட்டை பெறுவதற்கும், அடையாள அட்டை இருந்தும் உதவித் தொகை பெறாதவா்கள் விண்ணப்பிக்கவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கல்வி உதவித் தொகை தொடா்பான விண்ணப்பங்கள், தொழிற் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உதவி உபகரணங்கள் பெறுவது தொடா்பான விண்ணப்பங்களை கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நாகா்கோவில், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி, மற்றும் பத்மநாபபுரத்தில் உள்ள அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் 99945 02954 என்ற கட் செவி அஞ்சல் எண்ணுக்கும் விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04652 291744 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com