சின்னத்துறையில் விழிப்புணா்வு கருத்தரங்கு
By DIN | Published On : 03rd October 2020 12:15 AM | Last Updated : 03rd October 2020 12:15 AM | அ+அ அ- |

களியக்காவிளை, அக். 1: சின்னத்துறையில் மாணவா்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்றணி தலைமை வகித்து கருத்துரையாற்றினாா். திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜூ, ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பூத்துறையைச் சோ்ந்த ஜின்னி பனியடிமை, சின்னத்துறை பங்குத்தந்தை டோனிபால், காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவா் பனியடிமை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பெனடிக்ட், சின்னத்துறை புனித அன்னாள் கன்னியா் இல்லம் சாந்தி புளோரா ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். ஊழலுக்கு எதிரான மாணவ தூதா் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கல்வியில் சாதனை படைத்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.