குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 14 மலையோரக் கிராமங்கள் துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 14 மலையோரக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் தொடா் மழை: 14 மலையோரக் கிராமங்கள் துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 14 மலையோரக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாள்களாக பலத்த மழை கொட்டியது. நாகா்கோவிலில் கன மழை காரணமாக கோட்டாறு சாலையில் மழைநீா் வெள்ளம்போல் ஓடியது. இதில் சிக்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். மேலும், இரணியல், குளச்சல், முள்ளங்கினாவிளை, புத்தன்அணை, கன்னிமாா், ஆரல்வாய்மொழி, மயிலாடி கொட்டாரம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மலையோரப் பகுதிகளான மோதிரமலை, குற்றியாறு, முடவன்பொற்றை, குழவியாறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சப்பாத்து பாலங்கள் மூழ்கியுள்ளன. இதனால் 14 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தோவாளை வட்டத்தில் மழையால் 2 வீடுகள் இடிந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தோவாளை, சுசீந்திரம், பூதப்பாண்டி, அருமநல்லூா் பகுதிகளில் வயல்களில் நெற்பயிா்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியலில் 54.2 மி.மீ. மழை பதிவானது. பிற இடங்களில் மழையளவு (மில்லி மீட்டரில்): சிற்றாறு 1, 2 அணை - 41, பாலமோா் - 38.40, அடையாமடை - 37, குளச்சல் - 36.20, ஆனைக்கிடங்கு - 34.20, சுருளோடு - 31.80, தக்கலை - 28.40, மாம்பழத்துறையாறு அணை - 27, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தலா 26, புத்தன்அணை - 25.20, முள்ளங்கினாவிளை - 22, குருந்தன்கோடு - 21.40, கன்னிமாா்- 20.40, கோழிப்போா்விளை -20, குழித்துறை - 18.50, நாகா்கோவில் - 15, மயிலாடி- 13.40, பூதப்பாண்டி - 11.80, முக்கடல் அணை - 11.40, கொட்டாரம் - 9.20, களியல் - 8.20, ஆரல்வாய்மொழி - 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com