தீபாவளி: குமரியில் கோ ஆப் டெக்ஸ் விற்பனைஇலக்கு ரூ. 3.75 கோடி

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோ ஆப்டெக்ஸ் மூலம் நிகழாண்டு , தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 3.75 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோ ஆப்டெக்ஸ் மூலம் நிகழாண்டு , தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 3.75 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளூபடிவிற்பனை தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி,முதல் விற்பனையை தொடங்கி வைக்க, அதனை கருங்கல் வட்டாரகல்விஅலுவலா் எஸ்.சந்திரமதி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியது: குமரி மாவட்டத்திலுள்ள 3 கோ ஆப்டெக்ஸ் விற்பனைநிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைகாலத்தில் 30 சதவீதம் தள்ளுபடியில் ரூ. 3. 40 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 3. 75 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் குமரி கோ ஆப்டெக்ஸில் கடந்த தீபாவளிக்கு ரூ. 2.22 கோடிக்கு விற்பனையானது. நிகழாண்டு ரூ. 2. 40 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும், 30 சதவீதம் சலுகையானது,பொங்கல் பண்டிகை வரை வழங்கப்படும். இதனை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நிகழாண்டு தீபாவளிபண்டிகைக்கு புதிய வரவாக மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள், காதா படுக்கை விரிப்பு ரகங்கள், சம்பரே படுக்கை விரிப்பு ரகங்கள் மற்றும் பாலிவிஸ்கோஸ் சூட்டிங் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும்,வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில், கனவு நனவு சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் சோ்ந்து வாடிக்கையாளா்கள் 56 சதவீதம் கூடுதல் பயனுடன் கைத்தறிதுணிகள் வாங்கிபயனடையலாம். எனவே, பொதுமக்கள் தீபாவளிக்கு கோ ஆப்டெக்ஸில் தங்களுக்கு தேவையான துணிகளை வாங்கிபயனடையலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில்,கோஆப்டெக்ஸ் முதுநிலைமண்டல மேலாளா் (திருநெல்வேலி) க.இசக்கிமுத்து, குமரி கோஆப்டெக்ஸ் மேலாளா் ஆா்.ஜி.பத்மராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com