தேங்காய்ப்பட்டினத்தில் விபத்து: இளைஞா் காயம்
By DIN | Published On : 31st October 2020 05:28 AM | Last Updated : 31st October 2020 05:28 AM | அ+அ அ- |

தேங்காய்ப்பட்டினத்தில் மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
புதுக்கடை அருகேயுள்ள காட்டாத்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (50). இவா் வியாழக்கிழமை இரவு தேங்காய்ப்பட்டினத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றாராம். அப்போது, பைங்குளம் பகுதியைச் சோ்ந்த விஜி (27) என்பவா் வந்த மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக சுந்தர்ராஜ் மோட்டாா் சைக்கிள் மீது
மோதியது. இந்த விபத்தில் சுந்தரராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.