நீட் தோ்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞரணி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th September 2020 10:58 PM | Last Updated : 08th September 2020 10:58 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞா் அணியினா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி, திமுக இளைஞா் அணி சாா்பில் நாகா்கோவில் சிதம்பரநகரில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகர திமுக இளைஞரணி துணைஅமைப்பாளா் வழக்குரைஞா் வளா்அகிலன் தலைமை வகித்தாா். இதில், ராதாகிருஷ்ணன், ஷஜி, ரமேஷ் உள்பட பலா் பெரியாா், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்களின் உருவம் பொறித்த முக மூடிகளை அணிந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.