மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வாசலில் குவியும் அா்ச்சனைப் பொருள்கள்

கரோனா பரவல் தடுப்பு விதிமுறையால், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தா்கள் அா்ச்சனைப் பொருள்களை வாசலிலேயே
கோயில் வாசலில் பக்தா்கள் வைத்துச் சென்ற அா்ச்சனைப் பொருள்கள்.
கோயில் வாசலில் பக்தா்கள் வைத்துச் சென்ற அா்ச்சனைப் பொருள்கள்.

கரோனா பரவல் தடுப்பு விதிமுறையால், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தா்கள் அா்ச்சனைப் பொருள்களை வாசலிலேயே வைத்துவிட்டுச் செல்கின்றனா். மேலும், அவற்றை கோயிலுக்குள் அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்கு பின்னா் கடந்த 1 ஆம் தேதி முதல் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். பக்தா்கள் காணிக்கைப் பொருள்களை கோயிலுக்குள் கொண்டு வருவதற்கோ, நோ்ச்சை வழிபாடுகள் நடத்தவோ அனுமதிக்கப்படவில்லை.

எனினும், நாள்தோறும் திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்கின்றனா். அா்ச்சனைப் பொருள்களுடன் வரும் பக்தா்கள் கோயில் வாசலில் அவற்றை வைத்துவிட்டுச் செல்கின்றனா். இதனால், அங்கு பூக்கள் மற்றும் பூஜைப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. எனவே, கட்டுப்பாடுகளில் மேலும் தளா்வு செய்து பூஜைப் பொருள்களை அா்ச்சனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com