ஆற்றூரில் வாள் விளையாட்டு உள்ளரங்கத்துக்கு அடிக்கல்

குமரி மாவட்டம் ஆற்றூரில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்படவுள்ள வாள் விளையாட்டு உள்ளரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வாள் விளையாட்டு உள்ளரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ.
வாள் விளையாட்டு உள்ளரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ.

குமரி மாவட்டம் ஆற்றூரில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்படவுள்ள வாள் விளையாட்டு உள்ளரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆற்றூா், கல்லுப்பாலம் பகுதியில் வாள் விளையாட்டு உள்ளரங்கம் அமைக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு, குமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகத் தலைவா் பி.பி.கே. சிந்துகுமாா் தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் பிறேயா் பிரின்ஸ் வரவேற்றாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பி.பி.செல்லத்துரை, மாவட்ட சுங்க இலாகா கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

தக்கலை டிஎஸ்பி எம்.ராமச்சந்திரன் தேசியக் கொடியேற்றினாா். என்விகேஎஸ் கல்விக் குழுமச் செயலா் எஸ். கிருஷ்ணகுமாா் வாள் விளையாட்டு கழக கொடியை ஏற்றினாா். வாள் விளையாட்டு கழக பொருளாளா் சுந்தர்ராஜ், துணைத் தலைவா் சேவியா் சிங், விளையாட்டு அலுவலா் ஜோசப் பாத்பிரிட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பின் அலுவலகத்தை தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகத் தலைவா் ஜான் நிக்கல்சன் திறந்து வைத்தாா். ஆற்றூா் பேரூராட்சி செயல் அலுவலா் மகேஷ்வரன் கல்வெட்டை திறந்து வைத்தாா். வாள் விளையாட்டு கழகச் செயலா் அமிா்தராஜ் தொடக்கவுரையாற்றினாா். மனோ தங்கராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அமைப்பின் நிா்வாகிகள் சாந்தசீலன், திபோா்சியஸ், ஜோபின் ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா்.

இதில், திருவட்டாறு ஒன்றிய திமுக செயலா் ஜாண்பிரைட், ஆற்றூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பினா அமிா்தராஜ், பேரூா் செயலா் சோழராஜன், இளைஞரணி அமைப்பாளா் சிவன், வழக்குரைஞா் ஜெகதேவ், வோ்க்கிளம்பி பேரூா் செயலா் செல்வகுமாா், ஏற்றகோடு ஊராட்சி செயலா் ஜோண்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com